ஆலோசனை நிலையங்கள்

Basel-Stadt மாநிலத்தில் பல்வேறு ஆலோசனை நிலையங்கள் உள்ளன. சில மையங்கள் பொதுவான கேள்விகளுக்கு ஆலோசனை வழங்குகின்றன. பிற மையங்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆலோசனை வழங்குகின்றன. முதல் ஆலோசனை பெரும்பாலும் இலவசம். மேற்படி ஆலோசனைகளுக்கு நீங்கள் பல நேரங்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை. சில மையங்களில் பல்வேறு மொழிகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

பொதுவான ஆலோசனை நிலையங்கள்

இடம்பெயர்ந்தோருக்கான மத்திய ஆலோசனை மையம்

  • GGG Migration
    ஜிஜிஜி இடம்பெயர்வு ஊழியர்கள் சுவிட்சர்லாவில் அன்றாட வாழ்க்கை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் உங்கள் கேள்விகளுக்கு 14 மொழிகளில் பதில் அளிக்கின்றனர். ஒருவேளை நீங்கள் ஒரு ஜெர்மன் மொழி வகுப்பையோ அல்லது ஒருங்கிணைப்புக்கான வசதிகளையோ தேடுகிறீர்கள் என்றால், ஜிஜிஜி இடம்பெயர்வு ஊழியர்களால் உங்களுக்கு உதவ முடியும். தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ ஆலோசனைகளைப் பெறலாம். முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது. இதற்காக நீங்கள் பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

புகலிடச் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டம் பற்றிய தகவல்களுக்கு:

  • BAS Beratungsstelle
  • Freiplatzaktion

பிற ஆலோசனை மையங்கள்

  • நீங்கள் பொதுவான ஆலோசனைகளைப் பெறு, இன்னும் பல ஆலோசனை மையங்கள் உள்ளன. சில ஆலோசனை மையங்கள் உங்களுக்கு ஜெர்மன் அல்லாத பிற மொழிகளிலும் ஆலோசனைகளை வழங்குகின்றன.
  • இடம்பெயர்வு சங்கங்களிலிருந்து பொதுவான தகவல்களை உங்கள் சொந்த மொழியில் பெறலாம்.

மாநில நிர்வாகம் / நகரசபை நிர்வாகம்

பல சமயங்களில் உங்கள் வசப்படத்தில் அதிகாரிகள் உங்களுக்கு உதவலாம் உதாரணமாக மாநில நிர்வாகம் அல்லது நகராட்சி/கிராமசபை நிர்வாகம். ஊழியர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். அல்லது அவர்கள் எந்த ஆலோசனை மையம் உங்களுக்கு மேற்படி உதவ முடியும் என்று கூறுவார்கள். அதிகாரிகளின் இணையதளங்களில் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், வேலை நேரம் மற்றும் பிற தகவல்களைக் காணலாம்.

நிபுணத்துவம் பெற்ற ஆலோசனை நிலையங்கள்

ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உங்களுக்கு ஆலோசனை வழங்கும் பல ஆலோசனை மையங்கள் பாசில் பகுதியில் உள்ளன. எடுத்துக்காட்டாக: வயது, வேலை, வசிப்பிடம், கல்வி, திருமணம்/விவாகரத்து, வளர்ப்பு, குடும்பம், நிதி (கடன்/பட்ஜெட்), உடல்நலம், குடும்ப வன்முறை, ஒருங்கிணைப்பு, உளவியல் சிக்கல்கள், குழந்தைகள் பராமரிப்பு, கர்ப்பம், பாலியல், போதை, சமூகப் பிரச்சினைகள். பொதுவாக முதல் ஆலோசனைக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. "Hello Basel-Stadt" இல் தொடர்புடைய தலைப்புகளின் கீழ் சில ஆலோசனை மையங்களின் தொடர்பு விவரங்களை நீங்கள் காணலாம். அல்லது GGG Migration தகவல் மற்றும் ஆலோசனை மையத்திடம் கேட்கலாம். ஊழியர்கள் பல மொழிகளைப் பேசுகிறார்கள் மற்றும் பொருத்தமான ஆலோசனை சேவைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.

நீங்கள் இன்னும் ஜெர்மன் மொழி நன்றாக பேசவில்லையா? ஆலோசனை மையத்தில் உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்தேவைப்படலாம். நீங்கள் அங்கு செல்வதற்கு முன் ஆலோசனை மையத்தைக் கேளுங்கள். சில ஆலோசனை மையங்கள் பிற மொழிகளில் உங்களுக்கு ஆலோசனை வழங்கலாம். அல்லது இந்த மையங்கள் உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்யலாம். உங்களுக்காக மொழிபெயர்க்க உங்களுடன் ஒருவரை நீங்கள் அழைத்து வர வேண்டி இருக்கலாம்

துவேச அவமதிப்பு

நீங்கள் பாகுபாடு அல்லது இனவெறியை அனுபவித்திருக்கிறீர்களா? அல்லது பாகுபாடு அல்லது இனவெறியை நீங்கள் கவனித்தீர்களா? எனில் நீங்கள் தொடர்பு கொள்ளக்கூடிய மையங்கள் உள்ளன:

  • "STOPP Rassismus"என்பது பாஸல்-ஸ்டாட் மற்றும் பாசல்-லாண்ட்ஷாஃப்ட் மாநிலங்களின் ஆலோசனை மையம். ஆலோசனை இலவசமானது மற்றும் ரகசியம் காக்கப்படும். நீங்கள் தொலைபேசியில் அழைக்கலாம், நேரில் பார்வையிடலாம் அல்லது ஆன்லைனில் ஆலோசனை பெறலாம்.
  • நீங்கள் இனவெறி அல்லது பாகுபாடுகளை அனுபவித்திருந்தால் "Netzwerk Antirassismus" உங்களுக்கு ஆதரவளிக்கிறது.
  • "Stiftung GRA" யூத-விரோத பாகுபாடு குறித்து உங்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.