பிள்ளைகள் பராமரிப்பு

குழந்தை பிறந்த பின்பு அநேகமாகத் தாய் தந்தை இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். அதற்காகத்தான் Basel-Stadt மாநிலத்தில் குழந்தைப் பராமரிப்பு வசதிகள் உள்ளன. பெரும்பாலான சலுகைகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.

குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம் (KITA)

பகல்நேர பராமரிப்பு மையங்களில் உங்கள் குழந்தை நாள் முழுவதும் பராமரிக்கப்படும். பகல்நேர பராமரிப்பு மையத்தின் சுருக்கம் கிடா. பெரும்பாலான பகல்நேர பராமரிப்பு மையங்கள் 3 மாதங்கள் முதல் பள்ளி வரையிலான குழந்தைகளுக்கானவை. இருப்பினும், சில பகல்நேர பராமரிப்பு மையங்கள் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு முன்பும், மதிய உணவு நேரத்திலும், பள்ளிக்குப் பிறகும் கவனிக்கின்றன.

காத்திருப்புப் பட்டியல்கள் நீளமாக இருப்பதால், உங்கள் குழந்தையை மிக விரைவாகப் பதிவு செய்ய வேண்டும். பகல்நேர பராமரிப்பு மையங்கள் விலையில் வேறுபடுகின்றன. சில பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கான செலவில் ஒரு பகுதியை குடியிருப்பு நகராட்சி செலுத்துகிறது. பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் நீங்கள் வசிக்கும் நகராட்சி யிடம் எவ்வளவு செலவாகும் மற்றும் உங்கள் குழந்தையை எவ்வாறு பதிவு செய்வது என்று கேட்கலாம்.

விளையாட்டுக் குழுக்கள்

பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு விளையாட்டுக் குழுக்குச் செல்கிறார்கள். விளையாட்டுக் குழுவில் (Spielgruppe), சுமார் 3 வயது முதல் குழந்தைகள் தங்கள் பெற்றோர் இல்லாமல் சந்திக்கிறார்கள். பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர் குழந்தைகளை சில விளையாட்டுகளில் ஈடுபடுத்தி வைத்திருக்கிறார். குழந்தைகள் உதாரணமாகக், கைவினைப்பொருட்கள் செய்கிறார்கள் மற்றும் ஒன்றாக விளையாடுகிறார்கள், விளையாட்டுக் குழு தன்னார்வமானது.

உங்கள் பிள்ளை வீட்டில் ஜெர்மன் பேசவில்லையா? எனில் அது விளையாட்டுக் குழுவில் ஜெர்மன் மொழியைக் கற்க ஆரம்பிக்கலாம். இது உங்கள் குழந்தை பள்ளியைத் தொடங்கும் போது எளிதாக்கும்.

நாள் கட்டமைப்பு / மதிய உணவு

அனைத்து ஆரம்ப நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி பள்ளிகளில் அல்லது அதன் மிக அருகில் நாள் கட்டமைப்புகள் (Tagesstrukturen) உள்ளன. நாள் கட்டமைப்பு என்பது மதிய உணவு நேரத்தில் குழந்தைகள் பள்ளியில் தங்கி மதிய உணவைப் பெறுவதைக் குறிக்கிறது. பள்ளிக்குப் பிறகு, ஒரு நபர் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார், குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யலாம்.

உங்கள் குழந்தை நாள்கட்டமைப்பில் சேர வேண்டுமா?எனில் அதற்குப் பணம் செலுத்த வேண்டும். செலவு நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்கள் பிள்ளை வாரத்தில் ஒரு நாள் அல்லது பல நாட்கள் நாள்கட்டமைப்பிற்குச் செல்லலாம்.

பராமரிப்புக்குடும்பம்

உங்கள் குழந்தையை நீங்கள் ஒரு குழந்தை பராமரிப்பாளர் பார்த்துக் கொள்ளுமாறு விடலாம். ஒரு குழந்தையைப் பராமரிக்கும் நாள் குடும்பம் (Tagesfamilie) என்பது நாள் முழுவதும் அல்லது பள்ளிக்கு முன்பும் பின்பும் குழந்தைகளை அழைத்துச் செல்லும் குடும்பம். பொருத்தமான குழந்தை பராமரிக்கும் நாள் குடும்பத்தைக் கண்டறிய முகவர் நிலையங்கள் உங்களுக்கு உதவும். குழந்தைகளை பராமரிக்கும் நாள் குடும்பத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதை முகவர் நிலையங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும்.

குழந்தையுடன் துணையாக இருப்பவர் / அவசர சந்தர்ப்பங்கள்

சுவிட்சர்லாந்தில், இளைஞர்கள் மாலை அல்லது வார இறுதி நாட்களில் குழந்தை பராமரிப்பாளர்களாகவும் பணியாற்றலாம். அதற்கு இளைஞர்கள் சம்பளம் பெறுகிறார்கள். ஏற்கனவே ஒரு படிப்பில் சேர்ந்து குழந்தை பராமரிப்பைக் கற்றுக்கொண்ட பராமரிப்பாளரை ஏற்பாடு செய்துத் தரும் முகவர் நிலையங்களில் பட்டியலை செஞ்சிலுவைச் சங்கம் Basel-Stadt (SRK) வைத்திருக்கிறது.

அவசரகாலத்தில் குழந்தை பராமரிப்பு
ஒருவேளை அவசர கால சூழ்நிலையாக இருந்து உங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள யாராவது அவசரமாக வேண்டும் என்றிருந்தால். உதாரணமாக நீங்கள் அல்லது உங்கள் துணைவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், உங்கள் குழந்தையை யாரும் கவனிக்க முடியாது. சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் Basel-Stadt (SRK) அவசரகாலத்தில் குழந்தை பராமரிப்பைக் கொண்டுள்ளது. கவனிப்புக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். ஆனால் சில மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் செலவுகளை ஏற்றுக் கொள்கின்றன.