டொச்மொழி கற்றல்

டொச் வகுப்பில் நீங்கள் டொச் மொழியை நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். டொச் மொழியை கற்க பல்வேறு வகுப்புகள் உள்ளன.

வசதி வாய்ப்புக்கள்

டொச் மொழி கற்க பல்வேறு வகுப்புகள் உள்ளன, எடுத்துக்காட்டாக:

  • உங்களுக்கு சிறு குழந்தைகள் இருந்தால், குழந்தை பராமரிப்புடன் கூடிய வகுப்பில் கலந்துக்கொள்ளலாம் .
  • ஒருவேளை உங்களுக்கு லத்தீன் எழுத்துக்கள் இன்னும் தெரியாது அல்லது வாசிப்பதிலும் எழுதுவதிலும் உங்களுக்குச் சிக்கல் இருக்கிறது என்றால் ஒரு எழுத்தறிவு வகுப்பில் (Alphabetisierungskurs) கலந்துக்கொள்ளலாம்.

எந்தெந்த வகுப்புகள் உள்ளன மற்றும் வகுப்புகளின் விலை எவ்வளவு என்பதை இங்கே காணலாம்:

  • வயது வந்தோர் கல்வித் துறை (Fachstelle Erwachsenenbildung)
  • GGG Migration

மொழியின் தரம்

ஒரு நபர் எவ்வளவு நன்றாக ஜெர்மன் பேசுகிறார் என்பதை "பொதுவான ஐரோப்பிய குறிப்புக் கட்டமைப்பு" மூலம் அளவிட முடியும். இதன் சுருக்கம் GER. GER என்பது மொழிக்கான தரநிலை. இது ஆறு நிலைகளைக் கொண்டுள்ளது: உங்களிடம் A1 அல்லது A2 நிலை இருந்தால், உங்களுக்கு ஜெர்மன் மொழி பற்றிய அடிப்படை அறிவு இருக்கும். நீங்கள் C1 அல்லது C2 நிலையை அடைந்தால், நீங்கள் நன்கு முன்னேறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

  • சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வியை மேற்கொள்ள விரும்புகிறீர்களா? எனில் உங்களுக்கு நிலை B1 அல்லது B2 தேவை.
  • நீங்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பினால், உங்களுக்கு நிலை C1 அல்லது C2 தேவை.

நிதி உதவி

நீங்கள் பாசிலுக்குச் சென்று விட்டீர்கள் மேலும் குடியிருப்பு அனுமதியைப் பெறுகிறீர்களா? எனில் நீங்கள் ஒரு டொச் பாடத்திற்கான பரிசு சீட்டைப் பெறுவீர்கள். நீங்கள் 80 பாடங்களை இலவசமாக இதன் மூலம் படிக்கலாம். மாநிலத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிப்பள்ளியில் நீங்கள் பரிசு சீட்டைப் பெறலாம். நீங்கள் நுழைந்த பிறகு 12 மாதங்கள் வரை இந்த பரிசுச் சீட்டு செல்லுபடியாகும்.

அதற்குப் பிறகும் நீங்கள் மேலும் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புகிறீர்களா? எனில் அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இந்த படிப்புகளின் விலையில் வேறுபடுகின்றன. எனவே விலைகளை ஒப்பிடுவது சிறந்தது. சில வகுப்புகளை Kanton Basel-Stadt ஒரு குறிப்பிட்ட தொகையுடன் ஆதரிக்கிறது. இந்த வகுப்புகளுக்கு நீங்கள் குறைவான கட்டணம் செலுத்துவீர்கள்.