ஓய்வு நேரம்

Basel-Stadt இல் பல கவர்ச்சிகரமான ஓய்வு நேர நடவடிக்கைகள் உள்ளன. அதில் குறிப்பாக முக்கியமானவை கழகங்கள். இங்கே நீங்கள் புதிய நபர்களைச் சந்திக்கலாம் மற்றும் ஒன்றாக ஏதாவது செய்யலாம்.

கழகங்கள்

பாசில் மக்கள் பலர் ஏதாவது ஒரு கழகத்தின்(Verein) உறுப்பினர்களாக உள்ளனர். விளையாட்டுக்கழகங்கள் அல்லது கலாச்சாரக்கழகங்கள் என பல்வேறு வகையான ஆர்வங்களுக்கான கழகங்கள் உள்ளன. நீங்கள் ஒரு கழகத்தில் சேர்ந்தால் மற்ற மக்களை அறிந்து கொள்ளலாம். பெரும்பாலான கழகங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும்.

இளையவர்களுக்கான வசதிகள்

இளைஞர்கள் தங்கள் ஓய்வு நேர நடவடிக்கைகளுக்குப் பல சலுகைகளைப் பயன்படுத்தலாம். அங்கு அவர்கள் தங்கள் சகாக்களைச் சந்திக்கலாம். அவர்கள் அங்கு ஏதேனும் ஒரு திட்டத்தில் பங்கேற்கலாம் மற்றும் அவர்கள் சொந்த யோசனைகளைப் பரிந்துரைக்கலாம். வல்லுநர்கள் இளைஞர்களுடன் இருந்து அவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள் (Jugendarbeit). பொதுவாக இந்தச் சலுகைகள் இலவசம்.

சுற்றுலாவும் கலாச்சாரமும்.

Basel-Stadt மாநிலத்தில் நீங்கள் பல உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளலாம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பார்வையிடலாம். பலர் கோடையில் ரையின் நதியில் நீந்துகிறார்கள் அல்லது பூங்காவில் சுற்றுலா செல்கிறார்கள். மக்கள் குடும்பங்களாக பாசில் மிருகக்காட்சி சாலைக்குச் செல்ல விரும்புகின்றனர். இப்பகுதியில் அழகான நடைப்பயணம் மேற்கொள்ளும் மற்றும் மிதிவண்டி ஓட்டும் பாதைகள் உள்ளன. ப்ரைஸ்காவ்-இல் ஃப்ரைபுர்க் அல்லது ஸ்ட்ராஸ்புர்க் போன்ற நகரங்களை ரயிலில் விரைவாக அடையலாம். Basel Tourismus-இல் நீங்கள் எந்த உல்லாசப் பயணங்கள் செல்லலாம் மற்றும் எந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என்பது பற்றிய தகவலைப் பெறலாம்.

சுற்றுப்புற சந்திப்பிடங்கள்

சுற்றுப்புற சந்திப்பிடங்கள் (Quartiertreffpunkte) அனைவருக்கும் திறந்திருக்கும். இங்கு குடும்பங்கள் வயதானவர்கள் மற்றும் கொஞ்சம் மட்டுமே ஜெர்மன் பேசும் நபர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. சில சந்திப்பிடங்கள் குடும்ப மையங்களாக உள்ளன இங்கு தாய்மார்கள் மற்றும் தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் ஒருவரை ஒருவர் சந்திக்கலாம். சுற்றுப்புற சந்திப்பிடங்கள் உங்களுக்கு அன்றாட வாழ்வில் தேவையான ஆலோசனைகள் மற்றும் ஆதரவை அளிக்கிறது. சுற்றுப்புற சந்திப்பிடங்களில் நீங்கள் குடும்ப கொண்டாட்டங்கள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு அறைகளை வாடகைக்கு எடுக்கலாம்.

விரும்பிவேலைசெய்தல்

விரும்பி வேலை செய்தல் அல்லது தன்னார்வத் தொண்டு (Freiwilligenarbeit) மூலம் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவுகிறீர்கள். "தன்னார்வம்" என்றால் எந்த ஒரு பணத்தையும் நீங்கள் உங்கள் வேலைக்குக் கைமாறாகப் பெற மாட்டீர்கள். சுவிட்சர்லாந்தில் தன்னார்வத் தொண்டர்கள் குறிப்பாகக் கழகங்களில் பல பணிகளை மேற்கொள்கிறார்கள். நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்வதில் ஆர்வமாக உள்ளீர்களா? கலாச்சாரம், விளையாட்டு, சமூகப் பிரச்சினைகள், கல்வி, விலங்குகள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்லது ஆரோக்கியம் போன்ற பல பிரிவுகளுக்கு நீங்கள் கழகங்களில் ஈடுபடலாம்.

நீங்கள் தன்னார்வத் தொண்டு மற்றும் பிற பணிகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்:

  • தன்னார்வப் பணிக்கான சிறப்பு அலுவலகம் GGG Benevol
  • சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் Basel-Stadt (SRK)
  • இரு பாசிலுக்குமான காரிடாஸ்

புகலிடப் பகுதி மற்றும் அகதிகளுக்கான பணிகள் பற்றிய தகவல்கள்:

  • புகலிடத் துறையில் தன்னார்வப் பணிக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம்(KOFF)
  • சுவிஸ் அகதிகள் உதவி

விளையாட்டு, கலாச்சார மற்றும் கல்வி நிகழ்வுகளில் தள்ளுபடிகள்

"KulturLegi"அட்டை குறைந்த பணம் உள்ளவர்களுக்கானது. நீங்கள் KulturLegi அட்டை வைத்திருந்தால் விளையாட்டு கலாச்சாரம் மற்றும் கல்வி நிகழ்வுகளுக்கு குறைவாகவே பணம் செலுத்துவீர்கள். நீங்கள் Caritas இல் KulturLegi அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். Caritas நீங்கள் KulturLegi அட்டை பெற தகுதியானவர்கள் தானா என்று சரி பார்த்து உங்களுக்குத் தகவல்களை வழங்கும்.மேலும் குடும்ப அட்டை (Familienpass) மற்றும் குடும்ப அட்டை பிளுஸ் (FamilienpassPlus) ஆகியவையும் உள்ளன. இவை வடமேற்கு சுவிட்சர்லாந்தில் வசிக்கும் குடும்பங்களுக்கான அட்டைகள். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் இளம் வயதினருக்கு "வண்ண சாவி" அல்லது விடுமுறை பாஸ் (Ferienpass) போன்ற பல தள்ளுபடிகள் மற்றும் இலவச சலுகைகள் உள்ளன. KulturLegi, குடும்ப அட்டை அல்லது வண்ண சாவி மூலம், பல மலிவான சலுகைகள் உள்ளன. இதைப் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் இணையத்தில் காணலாம்.