வன்முறையாளர்களுக்கு உதவி

மற்றவர்களை உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ புண்படுத்தும் எவரும் பொறுப்பேற்று உதவி பெற வேண்டும். நடத்தை மாற்றத்தை ஆலோசனை அமர்வுகளில் கற்றுக்கொள்ளலாம்.

நான் எங்கே உதவி பெற முடியும்?

குடும்ப வன்முறைக்கு எதிரான கல்வித் திட்டம் வன்முறை இல்லாமல் மோதல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதை மக்களுக்குக் கற்பிக்கிறது. இந்தத் திட்டம் பெரியவர்களுக்கானது. ஒரு மொழிபெயர்ப்பாளரும் இருப்பார். 061 267 44 90 அல்லது haeusliche-macht@jsd.bs.ch இல் பதிவு செய்யலாம். பங்கேற்பு இலவசம்.

கூடுதல் சலுகைகள்:

  • குடும்ப வன்முறை பற்றிய மோதல் ஆலோசனை, 061 267 00 26, www.bdm.bs.ch (DE)
  • ஆண்கள் அலுவலகம் பாசில் பகுதி, 061 691 02 02, www.mbrb.ch (DE)
    ஆலோசனைக்கான விலையானது, ஆலோசனையை நாடுபவரின் நிதிச் சாத்தியங்களை அடிப்படையாகக் கொண்டது.

எவருக்கும் உடனடியாகப் பேசுவதற்கு ஆள் தேவைப்பட்டால், உதவிக் கையை (Dargebotene Hand) தொலைபேசி, மெசேஜ், சேட் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். அங்கே எப்போதும் யாரோ ஒருவர் இருப்பார். இரவில் கூட தொடர்பு கொள்ளலாம். பெயர் குறிப்பிடாமல் (அநாமதேயமாக) தொடர்பு கொள்ளலாம்.

  • உதவிக் கை (24/7), 143, www.143.ch (DE)