கட்டாய திருமணம் மற்றும் பெண் விருத்தசேதனம்

சுவிட்சர்லாந்தில் கட்டாயத் திருமணம் (Zwangsheirat) மற்றும் பெண்ணை விருத்தசேதனம் (Mädchenbeschneidung) செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. சிறப்பு நிறுவனங்களுடன் கூடுதலாக, பாதிக்கப்பட்டோர் ஆதரவு மையங்களும் (Opferhilfe) ஆதரவை வழங்குகின்றன.

கட்டாய திருமணம் என்றால் என்ன?

ஒருவர் குடும்பத்தின் அழுத்தத்தின் பேரிலும், அந்த நபரின் சொந்த விருப்பத்திற்கு மாறாகவும் இன்னொருவரை மணந்தால், அது கட்டாயத் திருமணம் எனப்படும். திருமணம் செல்லாததாக அறிவிக்கப்படலாம். திருமணத்தில் இருக்க வேண்டுமா அல்லது பிரிந்து வாழ வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் மக்களுக்கு உண்டு. ஒருவர் தனது விருப்பத்திற்கு மாறாக திருமணத்தில் இணைந்திருந்தால், அது கட்டாய திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது.

கட்டாயப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள்: மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், மன அழுத்தம் அல்லது உடல்ரீதியான வன்முறை.

சுவிட்சர்லாந்தில் கட்டாயத் திருமணம் தடைசெய்யப்பட்டுள்ளது.

உதவி

தேசிய சிறப்புப் பிரிவு 'zwangsheirat.ch' பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் இலவசமாக ரகசிய ஆலோசனைகளை வழங்குகிறது: 0800 800 007 இல் உதவி எண்ணை அழைக்கவும் அல்லது info@zwangsheirat.ch க்கு ஈமெயில் செய்யவும்

பெண் விருத்தசேதனம் என்றால் என்ன?

பெண் விருத்தசேதனத்தில், பெண்ணின் பிறப்புறுப்புகள் வெட்டப்படுகின்றன. வெவ்வேறு வடிவங்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. விருத்தசேதனம் செய்யப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் உடல்நலம் மற்றும் உளவியல் விளைவுகளை அனுபவிக்கின்றனர்.

பெண் விருத்தசேதனம் தடைசெய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திற்கு வெளியே தங்கள் குழந்தையை விருத்தசேதனம் செய்வதற்கு ஏற்பாடு செய்தால் பெற்றோர்கள் மீதும் வழக்குத் தொடரப்படும்.

உதவி

பெண் பிறப்புறுப்பு விருத்தசேதனுக்கு எதிரான நெட்வொர்க் (Caritas Schweiz) முக்கிய நபர்களுடன் தகவல் மற்றும் நெட்வொர்க்குகளை வழங்குகிறது. காரிடாஸ் சுவிட்சர்லாந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாகவும் ரகசியமாகவும் ஆலோசனை வழங்குகிறது: 042 419 23 55 / beratung@maedchenbeschneidung.ch

பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவு மையங்களும் (Opferhilfe) ஆதரவை வழங்க முடியும்.