தொழிற்கல்வி / துறைசார் பாடசாலைகள்

கட்டாயப் பள்ளிக்குப் பிறகு, பெரும்பாலான இளைஞர்கள் தொழில் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். நீங்கள் ஒரு கல்லூரியில் படிக்க விரும்பினால், உங்களுக்கு டிப்ளமோ தேவை. டிப்ளமோவை நீங்கள் நடுநிலைப்பள்ளிகளில் பெறலாம். நீங்கள் டிப்ளமோவை தொழில் பயிற்சியின் போதும் செய்யலாம்.

கல்வியின் அர்த்தம்

சுவிட்சர்லாந்தில் நல்ல கல்வியும் நல்ல வேலையும் மிக முக்கியம். நீங்கள் பள்ளியில் நல்ல செயல் திறனுடன் இருந்தால், பிற்காலத்தில் உங்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கட்டாய பள்ளிக்கு பிறகு உங்களைத் தொழில் வாழ்க்கைக்கு தயார் செய்வதற்கு உங்களுக்குப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன (Sekundarstufe II). மேற்படிப்பின் மூலம் நீங்கள் ஒரு நல்ல வேலையை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்.

கல்வி மற்றும் மேற்படிப்பு பற்றி உங்களுக்குக் கேள்விகள் உள்ளதா? தொழில்-, படிப்பு மற்றும் தொழில் ஆலோசனை மையம் (Berufs-, Studien- und Laufbahnberatung) இளைஞர்களுக்கும் பெற்றவரும் ஆலோசனைகளை வழங்குகிறது. இந்த ஆலோசனை இலவசம்.

தொழில் அடிப்படைக்கல்வி


கட்டாயப் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, பெரும்பாலான இளைஞர்கள் அடிப்படைத் தொழில் பயிற்சி (தொழில்பயிலுதல், Berufslehre) பெறுகிறார்கள். தொழில் பயிற்சியில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். உங்கள் வேலைக்குத் தேவையான நடைமுறை திறங்களை அங்கு நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் கூடவே தொழிற்கல்வி பள்ளிக்கும் செல்கிறீர்கள். இங்கு நீங்கள் 250 க்கும் மேற்பட்ட தொழில்களுக்குப் பயிற்சி பெறலாம். ஒரு தொழில் பயிற்சி 2 முதல் 4ஆண்டுகள் வரை நீடிக்கும். கடைசி இரண்டு பள்ளி ஆண்டுகளில் நீங்களே உங்களுக்கு ஒரு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி வாய்ப்பைக் கண்டறிய வேண்டும். இதற்கு பள்ளி உங்களுக்கு உதவும். ஆனால் உங்கள் பெற்றோரும் உடன் உதவ வேண்டும். தொழில்-, படிப்பு மற்றும் தொழில் ஆலோசனை மையம் (Berufs-, Studien- und Laufbahnberatung) இளைஞர்களுக்கான பல்வேறு சலுகைகள் மற்றும் ஆலோசனைகளைக் கொண்டுள்ளது. இந்த ஆலோசனை இலவசம். உங்கள் தொழிற்பயிற்சியின் போது அல்லது அதற்குப் பிறகு நீங்கள் ஒரு தொழில் புலமை தேரச்சி சான்றிதழை (Berufsmaturität) மேற்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் தொழில் பயிற்சி கல்லூரியில் படிக்கலாம்

துறைசார் பாடசாலைகள்

மேல்நிலைப்பள்ளி (Mittelschulen) பல்கலைக்கழகப் படிப்பு அல்லது தொழிற் பயிற்சி கல்லூரி (Fachhochschule) படிப்புக்கு உங்களைத் தயார்படுத்துகிறது. மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பரந்த பொதுக் கல்வியைப் பெறுகிறார்கள்.

வெவ்வேறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன:

  • உயர்நிலை பள்ளி டிப்ளமோ கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் இதன் பிறகு நீங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் அல்லது தொழிற் பயிற்சி கல்லூரிகளிலும் படிக்கலாம்.
  • சிறப்புப் புலமை அல்லது தொழில் புலமை பட்டம் கொண்ட மேல்நிலைப்பள்ளிகள். இதன் பிறகு நீங்கள் தொழிற் பயிற்சி கல்லூரியில் படிக்கலாம். சில சமயம் நீங்கள் ஒரு பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து படிக்கலாம். ஆனால் இதைச் செய்ய, நீங்கள் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சில நேரங்களில் கூடுதல் தேவைகளும் இருக்கும்.

இணைப்புச்சலுகை

நீங்கள் 18 முதல் 25 வயதுடையவரா, கட்டாயப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகுதான் பாஸல்-ஸ்டாட் மாநிலத்திற்குச் சென்றிருக்கிறீர்களா? எனில் நீங்கள் பிணைப்பு சலுகை மையத்தின் (Brückenangebote, ZBA) சலுகையில் பங்கேற்கலாம். இது தொழில் முறை வாழ்க்கையில் நீங்கள் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற வழிவகுக்கும். பிணைப்புச் சலுகை நீங்கள் ஒரு பயிற்சி வேலை அல்லது தொழிற் கல்வியைப் பெற உதவுகிறது. நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? எனில் பிணைப்பு சலுகை மையத்தைத் (Zentrum für Brückenangebote) தொடர்பு கொள்ளவும்.