உள்வாங்குதல் (ஒருங்கிணைப்பு)

நீங்கள் Basel-Stadt மாகாணத்தில் வசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. நீங்கள் ஆணா அல்லது பெண்ணா, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், எந்த மொழி பேசுகிறீர்கள், எந்த மதத்தை நம்புகிறீர்கள் அல்லது உங்களுக்கு என்ன குறைபாடு உள்ளது என்பது முக்கியமல்ல. அதே நேரத்தில், நீங்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். மேலும் பொருளாதார ரீதியாக உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வதும் மற்றும் ஜெர்மன் மொழியை கற்றுக் கொள்வதும் முக்கியம். இதைப் பற்றிய தகவல்களை நீங்கள் இங்கே பெறலாம்.

முக்கியமான அடிப்படைக் கோட்பாடு

நீங்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறீர்கள் என்றால் நீங்கள் கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இதன் பொருள், எடுத்துக்காட்டாக: எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் எல்லா மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் யாரும் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது. நீங்கள் பாசிலில் வசிக்கிறீர்கள் என்றால், ஜெர்மன் மொழியைக் கற்க வேண்டும். பொருளாதார ரீதியாகவும் உங்களை நீங்கள் கவனித்துக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் அனைவரும் கலந்து கொண்டால் மட்டுமே ஒருங்கிணைப்பு செயல்படும். பாசில் மக்களும் உங்களுக்குத் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். அவர்கள் உங்களுக்குத் தகவல்களைத் தரவும் ஆதரிக்கவும் வேண்டும்.

சுய பொறுப்பு

நீங்கள் புதிதாக பாசிலில் இடம் பெயர்ந்து உள்ளீர்களா? கூட்டமைப்பு, மாநிலங்கள் மற்றும் நகராட்சிகள் உங்களுக்குப் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கைக்கு நியாயமான அணுகல் இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால் நீங்களும் உங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். நீங்கள் ஒருங்கிணைப்புச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சமூக வாழ்க்கையில் பங்கெடுத்தல்

இவ்வாறாக நீங்கள் உங்களை ஒருங்கிணைக்க முடியும்: கழகங்களில் நீங்கள் புதிய நபர்களை நன்கு அறிந்து கொள்ளலாம் அல்லது உங்கள் குடியிருப்புப் பகுதியில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்குச் செல்லுங்கள்.
ஆரம்பத்தில் இது சற்று கடினமாக இருக்கலாம். பல மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்குத் திறந்த மனதுடன் இருப்பதில்லை. ஆனால் சில காலம் கழித்து பெரும்பாலான மக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வருகிறார்கள். இதனால் விட்டு விடாதீர்கள்.

தகவல்கள் / உதவிகள்

நீங்கள் பாசிலுக்கு இடம்பெயர்ந்து விட்டீர்களா, உங்களுக்கு உதவி அல்லது தகவல்கள் தேவைப்படுகிறதா? Basel-Stadt இல் நீங்கள் தொடர்பு கொள்ளக்கூடிய பல்வேறு இடங்கள் உள்ளன.

பாசில்-ஷ்டட் மாநிலத்தின் அலுவலகங்கள் மற்றும் நீங்கள் வசிக்கும் நகராட்சியிலிருந்து நீங்கள் தகவல்களைப் பெறலாம். ஆனால் புலம்பெயர்ந்தோருக்கான பிரத்தியேகத் தொடர்பு புள்ளிகளும் உள்ளன.

சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை மற்றும் பிற தலைப்புகள் பற்றிய தகவல்கள்:

  • GGG Migration

புகலிடச் சட்டம் மற்றும் புலம்பெயர்வோர் சட்டம் பற்றிய தகவல்கள்:

  • Beratungsstelle für Asylsuchende BAS
  • Freiplatzaktion

நீங்கள் இன்னும் ஜெர்மன் பேசவில்லையா? உங்களுக்காக மொழிபெயர்ப்பதற்கு ஒருவரை உங்களுடன் அழைத்துச் செல்லலாம். நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரையும் கோரலாம்.