குடும்பம் ஒன்றிணைதல்

நீங்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறீர்கள் என்றால் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் சுவிட்சர்லாந்திற்கு இடம் பெயரல்லாம். இதற்கு சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். உங்கள் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் உங்களை சுவிட்சர்லாந்தில் பார்க்க விரும்புகிறார்களா? எனில் அவர்கள் சில நேரங்களில் நுழைவு அனுமதி விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் இது உங்கள் பார்வையாளர் எந்த நாட்டில் இருந்து வருகிறார் என்பதைப் பொறுத்தது.

குடும்பம் ஒன்றிணைதல்

நீங்கள் இங்கு வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் நேரடி உறவினர்கள் அல்லது உங்கள் துணைவர் சுவிட்சர்லாந்துக்கு இடம் பெயர அனுமதி உண்டு (குடும்ப ஒருங்கிணைப்பு, Familiennachzug). உங்கள் குடும்பத்தில் எந்தெந்த உறுப்பினர்களுக்கு நீங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்? இது உங்கள் குடியுரிமை மற்றும் குடியிருப்பு அனுமதியைப் பொறுத்தது. நீங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு F அனுமதி பெற்றிருந்தால் உங்கள் குடும்பத்தினரும் உங்களைப் பின்தொடர முடியும்.

இடம்பெயர்வு அலுவலகம் (Migrationsamt) உங்கள் குடும்பம் உங்களுடன் சேரலாமா என்பதை தீர்மானிக்கிறது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் உங்களுக்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதை இடம்பெயர்வு அலுவலகம் உங்களுக்குத் தெரிவிக்கும்.

எச்சரிக்கை:
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் குடும்பம் உங்களுடன் சேர நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த கால அளவு பெரியவர்களை விட குழந்தைகளுக்கு குறைவாகவே உள்ளது. உதாரணமாக,உங்கள் துணைவர்.

கல்யாணத்திற்கு ஆயத்தம் செய்தல்

நீங்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறீர்கள், வெளிநாட்டில் உள்ள ஒருவரை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? எனில் நீங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்,இன் மூலம் நீங்கள் திருமணத்தைத் தயார் (Vorbereitung der Heirat) செய்ய முடியும்.

உங்கள் துணைவர் நாட்டிற்குள் நுழையலாமா என்பதை இடம்பெயர்வு அலுவலகம் (Migrationsamt) தீர்மானிக்கிறது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் உங்களுக்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதை அலுவலகம் உங்களுக்குத் தெரிவிக்கும்.

நுழைவு விசா

உங்கள் தாய் நாட்டிலிருந்து உங்கள் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் உங்களை சுவிட்சர்லாந்தில் சந்திக்க விரும்புகிறார்களா? எனில் அவர்களுக்கு சுவிட்சர்லாந்துக்கு நுழைவு விசா வேண்டும். பல நேரங்களில் விசா பெறுவது எளிதானதல்ல. சில நேரங்களில் உங்கள் பார்வையாளர்கள் நீங்கள் எழுதிய அழைப்புக் கடிதத்தைக் காட்ட வேண்டும். அல்லது பார்வையாளர்கள் தாங்களே தங்களுக்கு நிதி உதவி செய்து கொள்ள முடியும் என்ற உத்தரவாதம் அளிக்க வேண்டும் (உறுதிப் பிரகடனம், Verpflichtungserklärung).

வெளிநாட்டில் உள்ள சுவிஸ் தூதரகம் மக்கள் விசா பெற முடியுமா என்பதைத் தீர்மானிக்கிறது. உங்கள் பார்வையாளர்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் அவர்களுக்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதைப் பற்றிய தகவலைத் தூதரகம் வழங்குகிறது. இடம்பெயர்வு அலுவலகத்திலிருந்தும் (Migrationsamt) நீங்கள் தகவலைப் பெறலாம்.