மதம்

சுவிஸ் ஒரு பாரம்பரிய கிறிஸ்தவ நாடு. ஆயினும் இன்று பல வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும் இங்கு வாழுகிறார்கள். மதச் சுதந்திரம் சுவிட்சர்லாந்தில் மதச் சுதந்திரம் உள்ளது மற்றும் அரசு பள்ளிகள் மத ரீதியாக நடுநிலை வகிக்கின்றன.

மதமும் அரசும்

சுவிஸ் பாரம்பரியமான கிறிஸ்தவ நாடாகும். மதத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவை மாநிலங்கள் தீர்மானிக்கின்றன. ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தின் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாநிலங்களைப் போலவே Basel-Stadt மாநிலமும் சில மத சமூகங்களைப் பொது நிறுவனங்களாக அங்கீகரிக்கிறது. இதன் பொருள் அரசு அவர்களுக்கு சில உரிமைகளை அளிக்கிறது. உதாரணமாக அவர்கள் தங்கள் உறுப்பினர்களிடமிருந்து வரி வசூலிக்கலாம். Basel-Stadt மாநிலத்தில் உள்ள பின்வரும் மத சமூகங்கள் பொதுச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: புராட்டஸ்டன்ட் சீர்திருத்த தேவாலயம், ரோமன் கத்தோலிக்க திருச்சபை, பழைய கத்தோலிக்க திருச்சபை மற்றும் யூத சமூகம் மற்ற சில சமூகங்கள் மாநிலத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தனியார் சட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Basel-Stadt மாநிலத்தில் மத சமூகங்கள்

பாசெலின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பொதுச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நான்கு சமூகங்களில் ஒன்றில் உறுப்பினராக உள்ளனர். இதைத் தவிர வேறு பல மத சமூகங்களும் உள்ளன. உதாரணமாக முஸ்லிம், இந்து, பௌத்த அல்லது புதிய இயக்கங்கள். குடிமக்களில் சுமார் பாதி பேர் எந்த மத சமூகத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல.

மதச்சுதந்திரம்

சுவிசின் அரசியலமைப்பு மதச்சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கிறது. இதன் பொருள், ஒவ்வொரு நபரும் தங்களுக்கு என்ன மத நம்பிக்கைகள் உள்ளன என்பதை அவர்களே தீர்மானிக்க முடியும். ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படுத்தவும் பரப்பவும் அனுமதிக்கப்படுகிறார்கள். யாரும் யாரையும் ஒரு மத சமூகத்தில் சேரவோ அல்லது அதன் நடவடிக்கைகளில் பங்கேற்கவோ கட்டாயப்படுத்த முடியாது. மத சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்களைக் கடைப்பிடிக்க மக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மக்கள் அவர்களது மதம் அல்லது நம்பிக்கை காரணமாக பாகுபாடாக நடத்தப்படக்கூடாது.

மதமும் பாடசாலையும்.

கட்டாயப் பள்ளிக் கல்வி மத ரீதியாக நடுநிலையானது. ஆயினும், வகுப்பறையில் மத தலைப்புகளுக்கு இடம் உண்டு. ஆரம்ப பள்ளிப் கல்வி நிலையில் "இயற்கை ,மனிதன், சமூகம்" போன்ற பாடங்கள் உள்ளன. இது வெவ்வேறு வாழ்க்கை முறைகள் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றியது. தவிர, குழந்தைகள் தானாக முன்வந்து பங்கேற்கக்கூடிய மத போதனைகளும் உள்ளன. மேல்நிலைப் பள்ளியில் "ஒழுக்கவியல், மதங்கள், சமூகம்" என்ற பாடம் உள்ளது. இது ஒரு கட்டாயப் பாடம். இங்கு மாணவர்கள் வெவ்வேறு கலாச்சாரங்கள், மதங்கள், வாழ்க்கைத் தத்துவம் மற்றும் மதிப்புடன் வாழ்வதற்கு தேவையான ஒழுக்கம் போன்ற முக்கியமான திறன்களைக் கற்றுக் கொள்கிறார்கள். மத சமூகங்கள் சில சமயங்களில் மற்ற மதங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் பள்ளிக்கு வெளியே கற்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன.